உண்மையிலேயே அன்பு இருந்தால் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தில் எடியூரப்பா திருமண சம்பந்தம் வைக்க வேண்டும் சித்தராமையா பேட்டி


உண்மையிலேயே அன்பு இருந்தால் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தில் எடியூரப்பா திருமண சம்பந்தம் வைக்க வேண்டும் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 7 July 2017 9:00 PM GMT (Updated: 2017-07-08T01:11:49+05:30)

ஆதிதிராவிடர்கள் மீது உண்மையிலேயே அன்பு இருந்தால் அவர்களின் குடும்பத்தில் எடியூரப்பா திருமண சம்பந்தம் வைக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

ஆதிதிராவிடர்கள் மீது உண்மையிலேயே அன்பு இருந்தால் அவர்களின் குடும்பத்தில் எடியூரப்பா திருமண சம்பந்தம் வைக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆட்சியை பிடிக்க முடியாது

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆதிதிராவிடர்களின் வீடுகளுக்கு சென்று, ஓட்டலில் இருந்து உணவுகளை வரவழைத்து சாப்பிட்டு நாடகமாடுகிறார். இது மக்களுக்கு நன்றாக தெரியும். இத்தகைய நாடகம் ஆடுவதற்கு பதிலாக உண்மையிலேயே அந்த மக்கள் மீது அன்பு இருந்தால், எடியூரப்பா ஆதிதிராவிட குடும்பங்களுடன் திருமண சம்பந்தம் வைக்க வேண்டும். அப்போது அவருடைய உண்மையான அன்பு வெளிப்படும்.

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது எனறு பா.ஜனதா தலைவர்களுக்கு இப்போது புரிந்துள்ளது. அதனால் அதிகம் பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர். எடியூரப்பா எங்கே சென்றாலும், 150 தொகுதிகளில் வெல்வதாக கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு இப்போது உண்மை புரிந்துள்ளது. அதனால் அதுபற்றி பேசுவது இல்லை.

இலவச நீர் வினியோகம்

12–வது நூற்றாண்டில் பசவண்ணர், பிராமண குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஆதிதிராவிடர் குடும்பத்தின் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்து புரட்சி செய்தார். பா.ஜனதாவினருக்கு இத்தகைய அக்கறை இருந்தால் அதை செய்து காட்ட வேண்டும். இப்போது எடியூரப்பா ‘பா.ஜனதாவின் நடை குடிசை பகுதிகளை நோக்கி‘ என்ற பெயரில் அந்த மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளார். பாவம் எடியூரப்பா இதுவரை குடிசை பகுதிகளுக்கே சென்றது இல்லை என்று தோன்றுகிறது.

அதற்காகவே இத்தகைய ஒரு நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்துள்ளார். குடிசைவாழ் மக்களுக்கு நாங்கள் இலவச நீர் வினியோகம் செய்கிறோம். அவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளோம். அந்த மக்களின் நலனில் எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story