சிமெண்டு ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


சிமெண்டு ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 4:00 AM IST (Updated: 8 July 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிமெண்டு ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம், எலும்புக்கூடு படத்துடன் கலந்து கொண்டவர்களால் பரபரப்பு

அரியலூர்

அரியலூரில் சிமெண்டு ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கையில் எலும்புக்கூடு படத்தை பிடித்து கொண்டு சிலர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிமெண்டு ஆலைகள் நிர்வாக த்தை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடந்தது. சங்க தலை வர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகள் அள வுக்கு அதிகமாக சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுத்து இயற் கையை அழித்து வருகின்றன. ஆயிரக்கணக் கான மரங்கள் அழிக்கப்பட்டு நிலத்தடி நீரை யும் அதிகளவில் உறிஞ்சி எடுப் பதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

சிமெண்டு ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் எலும்புக்கூடு படத்தை கையில் பிடித்தபடி, இயற்கையை பாதுக்காக்கா விட்டால் மக்கள் இந்த நிலைக்கு தான் மாறிவிடுவோம் என்பதை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சங்கர், பாலசிங்கம், மாரியம்மாள், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story