ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும்


ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2017 3:45 AM IST (Updated: 8 July 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும், தமிழக ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர்,

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தின் போது, அரியலூர் மாவட் டத்தில் புதிதாக கலெக்டர் நியமிக்கப்படாததால் 68 நாட்களாக அரசுப்பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திற்கு உடனடியாக புதிய கலெக்டரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை கால தாமதமின்றி கொடுக்க வேண்டும்.

ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை, வறட்சி நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விவசாயக்கடனை தள்ளு படி செய்ய வேண்டும். சுண் ணாம்புக்கல் சுரங்கத்தில் சேரும் மழைநீரை விவசாயத் திற்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். ஆர்ப் பாட்டத்தில் தமிழக ஏரி மற் றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story