‘வார்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்க ‘பசுமை சென்னை’ அமைப்பு சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம்


‘வார்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்க ‘பசுமை சென்னை’ அமைப்பு சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம்
x
தினத்தந்தி 8 July 2017 5:30 AM IST (Updated: 8 July 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

‘வார்தா’ புயலில் சென்னை இழந்த பசுமையை மீட்டெடுப்பதற்கு ‘பசுமை சென்னை’ அமைப்பு சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம்.

சென்னை,

பசுமை சென்னை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘வார்தா’ புயலில் சென்னை இழந்த பசுமையை மீட்டெடுப்பதற்கு புதிய பயணத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இன்னும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் மரக்கன்றுகளை சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

முதல்கட்டமாக இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு, சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களிடம் கலந்து ஆலோசித்து நட இருக்கிறோம். அதோடுமட்டுமல்லாமல், மரங்கள் நடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம்.

அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த மரக்கன்றுகளை நட்டு இருந்தால், இன்று சென்னை காடாக தான் காட்சியளித்து இருக்கும். ஆனால் அவர்கள் வளர்ந்த மரக்கன்றுகளை நடாததால் எந்த இடத்திலும் மரங்கள் வளரவில்லை. எங்களை பொறுத்தவரையில், 5 அடி முதல் 6 அடி வரை வளர்ந்த மரக்கன்றுகளை அதன் சூழலுக்கு ஏற்ப நடுவோம்.

பசுமை சென்னை அமைப்போடு 20-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளும் கைகோர்த்து இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறோம். கண்டிப்பாக வெற்றியுடன் முடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story