ஜனாதிபதி தேர்தலின்போது புதுச்சேரியில் எம்.பி.க்களும் வாக்களிக்கலாம்


ஜனாதிபதி தேர்தலின்போது புதுச்சேரியில் எம்.பி.க்களும் வாக்களிக்கலாம்
x
தினத்தந்தி 8 July 2017 3:01 AM IST (Updated: 8 July 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலின்போது நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் (எம்.பி.க்கள்) மேற்குறிப்பிட்ட இடத்தில் வாக்களிக்கலாம்.

புதுச்சேரி, 

புதுவை சட்டசபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வின்சென்ட்ராயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்குப்பதிவு செய்யும் இடமாக புதுவை சட்டசபை செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற குழு அறை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதுவை சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க விரும்புவதாக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே அறிவித்து அனுமதி பெற்றுள்ள நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் (எம்.பி.க்கள்) மேற்குறிப்பிட்ட இடத்தில் வாக்களிக்கலாம்.

புதுச்சேரியில் வாக்களிக்க விரும்பும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது அடையாள அட்டையை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வாக்களிக்க ஏதுவாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஏற்பு அளிக்கும் வகையில்தான் வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

புதுவை சட்டசபை செயலக கட்டிடத்தில் சட்டமன்ற குழு அறையில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் வின்சென்ட்ராயர் கூறியுள்ளார். 

Next Story