கணவன்-மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டல் திருமண தகவல் மைய உரிமையாளர் கைது


கணவன்-மனைவியை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டல் திருமண தகவல் மைய உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 8 July 2017 12:11 PM IST (Updated: 8 July 2017 12:11 PM IST)
t-max-icont-min-icon

அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கணவன்-மனைவி அந்தரங்க காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிய திருமண தகவல் மைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நியூ காலனியை சேர்ந்தவர் சிவபாலன் என்ற கதிரேசன் (வயது 49). இவர், வளசரவாக்கத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2 மாதங்களாக தஞ்சாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், தனது மனைவி மோகன பிரியா என்ற பிரியா உடன் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் 2 மாதம் வேலை பார்த்ததற்கான சம்பளம் தரும்படி பன்னீர்செல்வம் தம்பதியினர் கேட்டனர். அதற்கு சிவபாலன், பணத்துக்கு பதிலாக காசோலை வழங்கினார். அதை வங்கியில் மாற்ற சென்ற போது, அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.

வீடியோ எடுத்து மிரட்டல்

இது குறித்து சிவபாலனிடம் கேட்டனர். அதற்கு அவர், கணவன், மனைவி இருவரின் அந்தரங்க வீடியோ படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், பணம் கேட்டால் அவற்றை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன பிரியா, இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

கைது

அதில், கணவன்-மனைவி இருவரும் தங்கி இருந்த அறையில் சிவபாலன் ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தி அவர்களின் அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து திருமண தகவல் மைய உரிமையாளர் சிவபாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story