பிரமாதமான முட்டை


பிரமாதமான முட்டை
x
தினத்தந்தி 8 July 2017 4:08 PM IST (Updated: 8 July 2017 4:08 PM IST)
t-max-icont-min-icon

விதவிதமான உணவுப் பொருட்களை உருவாக்குவதில், ஜப்பானியர்களுக்கு இணை யாருமில்லை.

விதவிதமான உணவுப் பொருட்களை உருவாக்குவதில், ஜப்பானியர்களுக்கு இணை யாருமில்லை. பூண்டு சுவைகொண்ட கோலாவை உருவாக்கி இருந்தார்கள். தற்போது எலுமிச்சையும், ஆரஞ்சும் சேர்ந்த சுவையும், வாசனையும் கொண்ட முட்டைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

எலுமிச்சையும், ஆரஞ்சும் ஜப்பானியர்களின் விருப்பமான பழங்கள். ‘யுஸு டாமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புளிப்புச் சுவையுடைய முட்டைகளை, ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முட்டையில் செயற்கையாக எந்த ரசாயனமும் சேர்க்கப்படவில்லை. கோழிகளுக்கு எலுமிச்சை, ஆரஞ்சு இலைகள், அதன் தோல்கள் போன்றவற்றைத் தீவனமாகக் கொடுத்து வளர்ப்பதால் முட்டைகளிலும் அந்தச் சுவையும், மணமும் வந்துவிடுகின்றன. சாதாரண முட்டைகளைப் போலவே ‘யுஸு டாமா’ முட்டைகள் காட்சியளித்தாலும், மணத்திலும் சுவையிலும் வித்தியாசப்படுகிறது. சமைக்கும்போதே வாசனை பிரமாதப்படுத்துகிறது. இந்த முட்டை கொஞ்சம் இனிப்புச் சுவையுடனும் இருக்கும் என்பது கூடுதல் விசேஷம்! 6 முட்டைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை சுமார் 260 ரூபாய்.

Next Story