இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் விழா
ஆற்காட்டில் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
ஆற்காடு,
ஆற்காட்டில் எண்ணெய் நிறுவனங்களின் சார்பில், வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மத்திய அரசின் திட்டங்களின் ஒன்றான பிரதம மந்திரி உஜ்ஜவாலா யோஜனா திட்டத்தின்கீழ் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வட்டார மேலாளர் குமார் தலைமை தாங்கினார். முதுநிலை மேலாளர் ரமேஷ், விற்பனை மேலாளர்கள் ஸ்ரீதர், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வி.கே.ஆர்.சீனிவாசன், கே.எல்.இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 ஆயிரத்து 500 பேருக்கு இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்குதலை தொடங்கி வைத்து பேசினர்.
விழாவில் வேலூர் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தசரதன், சமூக ஆர்வலர் சதீஷ்குமார், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வட்டார மேலாளர் வெங்கடேசன், ஆற்காடு கீர்த்தி கியாஸ் ஏஜென்சி கிருஷ்ணகுமார் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்புசாரா அணி மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஆற்காடு நகர தலைவர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி மேலாளர் மாலினி நன்றி கூறினார்.