திருச்செந்தூரில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


திருச்செந்தூரில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்  கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 July 2017 3:00 AM IST (Updated: 9 July 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

தூத்துக்குடி,

திருச்செந்தூரில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை, திருச்செந்தூர் பேரூராட்சி, பேரூராட்சி நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில்,

திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணிகள், தெற்கு ரத வீதியில் அமைய உள்ள 16 மீட்டர் உயரமுள்ள உயர மின்கோபுர அமைக்கும் பணிகள் குறித்தும், சபாபதி புரம் பகுதியில் 30 இடங்களில் அமைக்கப்பட உள்ள எல்.இ.டி விளக்குகள் குறித்த பணிகள் பற்றியும் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

வழிகாட்டி பலகை

மேலும், திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைக்கும் பணிகளையும், திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் உள்ள தோரணவாயில் புதுப்பிக்கும் பணிகளையும், பஸ் நிலையத்தின் உப்புற சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல் பணிகளையும், திருச்செந்தூர்–கன்னியாகுமரி சாலை, நாகர்கோவில் சாலை, நெல்லை சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்கும் பணிகள் குறித்தும், தினசரி சந்தை அருகில் விற்பனை அங்காடி கட்டிடம் அமைக்கும் திட்டப்பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் அருணாசலம், திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மனோ ரஞ்சிதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story