பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பூமலை சஞ்சீவிராயர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 9 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூரில் பூமலை சஞ்சீவிராயர் மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணிக்கு மலையின் அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி கையில் தேங்காய், பூ, பழங் களுடன் மலையை சுற்றி கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.


தொடர்ந்து வழித்துணை ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கிரிவலம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் பாடாலூர், திருவிளக் குறிச்சி, தெரணி, காரை, விஜயகோபாலபுரம், புதுக் குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிரிவலத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயதேவி மற்றும் கிரிவல கமிட்டியினர் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story