சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மோரமடுவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது செண்டஅள்ளியை சேர்ந்த பேக்கரி கடை தொழிலாளியான பெருமாள் (27) என்பவர் அந்த சிறுமியிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை, அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் பெருமாளை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பெருமாளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று பெருமாளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் (பொறுப்பு) சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து மாரண்டஅள்ளி போலீசார், பெருமாளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான உத்தரவு கடிதம் ஏற்கனவே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருமாளிடம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story