போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,100 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-09T02:28:48+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் கர்நாடக மாநில எல்லையில் கும்ளாபுரம், அந்திவாடி, ஜூஜூவாடி, கக்கனூர், பேரிகை ஆகிய இடங்களிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையான நேரலகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களிலும், ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி மற்றும் வரமலைகுண்டா ஆகிய இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் மாவட்ட காவல் துறை சார்பில் நிரந்தர சோதனை சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 5 உட்கோட்டங்களில் உள்ள 31 போலீஸ் நிலைய எல்லை பகுதியில் தினந்தோறும் வாகன சோதனை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 34 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 550 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் இயக்கிய 36 வாகன ஓட்டிகள் மீதும், ஆவணங்கள், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 480 பேர் மீதும் என மொத்தம் 1100 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story