கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 9 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி பிரகதீஸ்வரர் சமேத பெரியநாயகி அம்பாளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பக்தர்கள் குருக்கள் தெரு, கணக்கவினாயகர் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story