நாடுகள் தேடும் நல்ல விவசாயி
வறட்சியால் விவசாய நிலங்கள் காய்ந்துபோய் கிடக்கும் இந்த காலகட்டத்தில், ஈரோடு மாவட்டத்தின் எல்லை கிராமமான வேடசின்னானூரில் ஒரு விவசாய நிலம்
வறட்சியால் விவசாய நிலங்கள் காய்ந்துபோய் கிடக்கும் இந்த காலகட்டத்தில், ஈரோடு மாவட்டத்தின் எல்லை கிராமமான வேடசின்னானூரில் ஒரு விவசாய நிலம் நடவுக்கு தயார் ஆகிக்கொண்டிருந்ததை பார்த்தபோது ஆச்சரியமாகவே இருந்தது. அங்கு ஒரு பெண் அவரது 3 மகள்களுடன் விவசாய நிலத்துக்குள் இறங்கி மஞ்சள் நடவு செய்து கொண்டிருந்தார். மஞ்சள் 10 மாத பயிர். தண்ணீர் இல்லை என்றால் அறுவடை சாத்தியமில்லை. ஆனால் அவர் நம்பிக்கையோடு நடவு செய்ய காரணமாக இருப்பது, சொட்டு நீர்ப் பாசனம்.
நம்பிக்கை நிறைந்த அந்த பெண் விவசாயியின் பெயர் கீதா லட்சுமி. சத்தியமங்கலம் கோம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர். “நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். பள்ளிப்பருவத்திலே அனைத்து தோட்ட வேலைகளையும் பழகிவிட்டேன். விவசாய குடும்பத்திலே எனக்கு திருமணமானது. என் கணவர் வி.எம்.ஆர்.ராமமூர்த்தி புதுமையான முறைகளில் விவசாயம் செய்பவர். அவரிடமிருந்து நானும் புதிய விஷயங்களை நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.
இவர்கள் மஞ்சள் நடவு செய்துகொண்டிருந்த இடம் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. டிராக்டரால் உழுது சரிசெய்யப்பட்டிருந்தது. உரம் கலந்த களர் மண் பூமி அது. 2 அடி அகலத்தில் பார் பிரிக்கப்பட்டிருந்தது. இடைஇடையே அரை அடி அகலத்துக்கு இடைவெளி விடப்பட்டிருந்தது. இப்படியே நூற்றுக் கணக்கான பார்கள். நம்மிடம் பேசிக்கொண்டே மண்ணைக் கிள்ளி, மஞ்சள் விதையை ஒரு சாண் இடைவெளியில் லாவகமாக ஊன்றிக்கொண்டிருந்தார், கீதா லட்சுமி.
அவருக்கு துணையாக நடவில் ஈடுபட்டிருந்த 3 மகள் களில் இருவர் பட்டதாரிகள். மூத்த மகள் ரம்யாதேவி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் செய்கிறார். அவர் “விவசாயம்தான் எனக்கு பிடித்தமானது. படிப்பை முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் போக மனமில்லை. விவசாயத்தை தேடி வந்துவிட்டேன். இதில் கிடைக்கும் மனதிருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை” என்றார்.
2-வது மகள் லாவண்யா தேவி எம்.காம் பட்டதாரி. “அனைத்து தொழிலுக்கும் அடிப்படை விவசாயம்தான். தொழில்களில் முதன்மையானதுவும் அதுதான். எனவே நானும் விவசாயியாகவே வாழ விரும்புகிறேன்” என்கிறார்.
3-வது மகள் நிவேதாஸ்ரீ, கோவையில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. உணவு பதப்படுத்துதல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கப்போகிறார். “விவசாய விளை பொருட் களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற வேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். அதற்காகவே நான் இந்த துறையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.
இந்த மூன்று இளம் விவசாயிகளும் தங்களுக்கு ரோல்மாடலாக தங்கள் தந்தையை சொல்கிறார்கள். அவரை தேடிக்கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தார். உண்மையிலே மனைவி கீதாலட்சுமி சொன்னது போல கணவர் ஒரு புதுமையான விவசாயிதான். இந்திய மஞ்சளை கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் விதைக்க அங்குள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தவர். அடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பறக்க இருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம், மெக்சிகோ போன்ற நாடுகளும் இவரை அழைத்துக்கொண்டிருக்கின்றன.
நாடுகள் தேடும் அளவுக்கு இந்த வி.எம்.ஆர்.ராமமூர்த்தி மஞ்சள் விவசாயத்தில் என்ன புதுமை செய்தார்?
“நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். விவசாயம்தான் எங்கள் தொழில். அப்பா காலத்தில் இருந்தே மஞ்சள் பயிரிடுகிறோம். முன்பெல்லாம் இங்கு ஈரோடு நாட்டு மஞ்சள் என்ற வகைதான் பயிரிடப்பட்டு வந்தது. அதன் விற்பனை விலை குறைவு. அதனால் மஞ்சள் பயிரிடுவது நஷ்டமாக இருந்தது. அந்த ஒரே ரக மஞ்சளை விதைத்து, அறுவடைசெய்து, அதுதான் சிறந்தது என்று கூறிக்கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எது அதிக விளைச்சல் தருகிறதோ, அதை பயிரிடவேண்டும் என்று முடிவுசெய்து, அதற்கான தேடலில் இறங்கினேன். மஞ்சளில் உள்ள அனைத்து ரகங்களையும் பரீட்சார்த்த முறையில் விதைத்து அதன் பலன் என்ன என்று பார்க்க விரும்பினேன்.
அந்த காலகட்டத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பி.எஸ்.ஆர்.1, பி.எஸ்.ஆர்.2 ஆகிய ரகங்களை உருவாக்கியது. அவை ஓரளவுக்கு நல்ல விளைச்சலை கொடுத்தன. பின்பு சேலம் ரகம் பிரபலமானது. ஒடிசா மாநில ரகமும் நல்ல விளைச்சலை தந்தது. அதன் பின்பும் என் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. புதிய ரக விதைகளுக்காக தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு வேளாண்மை பல்கலைக்கழகங்களுடனும் தொடர்பில் இருந்தேன். அங்கு புதிய ரகங்கள் கண்டுபிடித்தால் உடனே அதை வாங்கி பயன்படுத்துவேன். இப்படி கிட்டத்தட்ட 25 ரக மஞ்சள்களை சோதனை முயற்சியாக நடவு செய்திருக் கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வாழைக்காய் வியாபாரத்துக்காக கேரளா சென்றேன். அங்கு ஒரு தோட்டத்தில் ஆள் உயரத்துக்கு வளர்ந்து நின்ற மஞ்சள் செடிகளை பார்த்தேன். அதுவரை 2 அடி, 3 அடி உயரத்துக்கு வளரும் செடிகளைத்தான் பார்த் திருக்கிறேன். அதிசயித்துபோய் அது பற்றி விசாரித்தபோது அது கேரள வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கிய பிரதீபா மஞ்சள் ரக செடி என்பதை அறிந்தேன்.
உடனே அந்த பல்கலைக்கழகத்துக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து, ஒரு ஏக்கரில் நடுவதற்கு தேவையான விதைகளை வாங்கி வந்து, விதைத்தேன். எனக்கு சொந்தமான 24 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டும் பிரதீபா மஞ்சளுக்காக ஒதுக்கினேன். நிலத்தை பக்குவப்படுத்தி, ஒரு சாண் இடைவெளி விட்டு விதைகளை ஊன்றினேன். பின்னர் சொட்டு நீர் பாசன குழாய்களை போட்டு வழக்கம்போல தண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தேன். 45-வது நாளில் விதை முளைத்து செடிகள் வெளியே வரத்தொடங்கின. ஐந்து மாதத்தில் ஆள் உயரத்துக்கு செடிகள் வளர்ந்து விட்டன. 9 வது மாதம் அறுவடை காலம்.
நிஜமாக எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு செடியில் 5 முதல் 7 கிலோ வரை மஞ்சள் பிடித்திருந்தது. ஒரு ஏக்கரில் நான் 800 கிலோ மஞ்சள் விதைத்தேன். எனக்கு அறுவடையில் 35 ஆயிரம் கிலோ மஞ்சள் கிடைத்தது. அதுவே சாதாரண மஞ்சள் என்றால் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் கிலோவே கிடைத்திருக்கும். வேகவைத்த மஞ்சளிலும் எடை குறையவில்லை. மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் குர்க்குமின் மருத்துவப்பொருளின் சதவீதமும் மற்ற மஞ்சளைவிட அதிகமாக இருந்தது. அது பற்றி கேரள வேளாண்பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கூறினேன். அவர்கள் என்னிடமிருந்து விதைகளை பெற்றுக்கொண்டனர்” என்று பெருமிதப்படுகிறார், ராமமூர்த்தி.
கடந்த ஆண்டு இவரைத் தேடி தாய்லாந்து நாட்டில் இருந்து தொழிலதிபர் சனான், அவரது நண்பர் முபாரக் மற்றும் தாய்லாந்து அரசின் வேளாண் அதிகாரிகள் சிலரும் சத்தியமங் கலத்துக்கு வந்தனர்.
“அவர்கள் தாய்லாந்தில் மஞ்சள் நடவு செய்ய விரும்புவதாகவும், அது பற்றி தெரிந்து கொள்ள கேரள பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்னை சந்திக்கும்படி கூறியதாகவும் சொன்னார்கள். அவர்களை வரவேற்று தோட்டத்திற்கு அழைத்துச்சென்று 2 நாட்கள் முழுமையாக மஞ்சள் நடவு குறித்தும், அறுவடை குறித்தும் எடுத்துக் கூறினேன். பின்பு அவர்கள் தாய்லாந்து அரசின் விருந்தினராக அவர்களின் செலவில் என்னை அங்கு அழைத்துச்சென்றனர்.
நான் அதற்கு முன்பே கம்போடியா நாட்டுக்கு மஞ்சள் விவசாயம் தொடர்பாக சென்று வந்தேன். அந்த வாய்ப்பு நமது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொறியாளர் டி.வி.வரதராஜன் என்பவர் மூலம் கிடைத்தது. அவர் அங்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அங்கு விளையும் மஞ்சளில் இருந்து அவர்களே மருந்து தயாரிக்கிறார்கள்.
கம்போடியா சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு மஞ்சளுக்கான உழவு, பார் அமைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், நடவு ஆகியவை குறித்து பயிற்சி அளித்தேன். அப்போது பிரதீபா ரகம் பற்றி எனக்கு தெரியாததால் ஒடிசா ரக விதைகளை அனுப்பிவைத்தேன். ஆனால் தாய்லாந்து விவசாயிகளுக்கு பிரதீபாவை பயிரிடுவதற்கான பயிற்சியை அளித்தேன்.
வெள்ளை வேட்டி-சட்டையில் தாய்லாந்தில் ஒரு தமிழக விவசாயியாகவே நான் கால் வைத்தேன். முழுநேரமும் வேட்டி சட்டையுடன்தான் வலம் வந்தேன். எனக்கு அங்கு உயரிய அரசு மரியாதை கிடைத்தது. தமிழைத் தவிர வேறு மொழிகள் பேசவோ, படிக்கவோ, எழுதவோ தெரியாத எனக்கு விவசாயம் என்ற தொழில் கொடுத்த கவுரவத்தை எண்ணி வியந்தேன்.
15 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து மஞ்சள் பயிரிட 400 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தேன். தாய்லாந்தில் ஆண்டுக்கு 7 மாதங்கள் மழை பொழிகிறது. எனவே பாசனம் பற்றிய கவலை இல்லை. அங்கு ரசாயனம் கலக்காத வளமான மண் உள்ளது. அவர்கள் மஞ்சள் விவசாயத்தில் இப்போதுதான் முதல் முறையாக ஈடுபடுகிறார்கள். விவசாய நுணுக்கங்கள் அனைத்தையும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தேன்.
அங்குள்ள விவசாயிகளும், அரசு வேளாண்துறை அதிகாரி களும் ஆர்வமாக அனைத்தையும் கற்றுக்கொண்டனர். என்னுடன் ஆடிட்டர் மோகன் என்பவரை அழைத்துச்சென்று இருந்தேன். அவருக்கு 6 மொழிகள் தெரியும். அதனால் எனக்கு தகவல் தொடர்பில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை” என்றார்.
இவரே 400 ஏக்கருக்கு தேவையான விதை மஞ்சளை அனுப்பி வைத்திருக்கிறார். இப்போது அந்த விதைகள் முளைத்து செடிகள் வளர்ந்து வருகின்றன. அறுவடையின்போது ராமமூர்த்தியை அங்கே அழைத்திருக்கிறார்கள். அடுத்து பிலிப்பைன்ஸ், வியட்னாம் போன்ற சில நாடுகளில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. இவரது வெளிநாட்டு தகவல் தொடர்புகளுக்கு மகள்கள் உதவுகிறார்கள். இவர் எப்போது விவசாய பணிகளை தொடங்கினாலும் மனைவியும், மகள்களும்தான் முதல் விதையை நடவு செய்கிறார்கள். முன்பு அவரது அம்மா லட்சுமி அம்மாள் விவசாய பணிகளை தொடங்கிவைத்திருக்கிறார்.
“இந்தியா விவசாய நாடு. நம் நாடு விவசாயத்தில் உலகத்திற்கே வழிகாட்டவேண்டும் என்பதுதான் என் ஆசை. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து கொண்டிருந்தால் போதாது. படித்த, நமது அடுத்த தலைமுறையையும் விவசாயத்திற்கு கொண்டுவந்தால்தான் விவசாயத்தில் புதுமை படைக்க முடியும். இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையையும் விதைக்க முடியும். அதனால்தான் என் மகள்களும் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்” என்கிறார், வி.எம்.ஆர்.ராமமூர்த்தி.
தலைநிமிர்ந்து நிற்கட்டும், இந்த தன்னம்பிக்கை விவசாய குடும்பம்!

Related Tags :
Next Story