செய்தி தரும் சேதி - 23. நீலக்கடலின் ஓரத்தில்...
கடல் என்பது நீர்ப்பரப்பு மட்டுமல்ல. அதிகத்தைக் குறிக்கும் சொல்லும் அது.

‘அறிவுக் கடல்’, ‘கருணைக் கடல்’, ‘கண்ணீர்க் கடல்’ என்று அளவில் பெரியதை அதுவே சுட்டுகிறது.
கடலைப் பார்க்கும்போது மனமும் விரிகிறது. சில மணித்துளிகள் கடற்கரையில் அமர்ந்து மவுனமாக கடலை மட்டுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் அன்றாடம் எவ்வளவு அற்பமாக நடந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியும்.
கரையில் நின்று அலைகள் கால்களைத் தழுவ ஆனந்தப்படும் நாம், அவை கொஞ்சம் அத்துமீறினால் அதிர்ந்துவிடுகிறோம். அலைகளை எந்த அரசு ஆணையாலும் கட்டுப்படுத்த முடியாது.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களின் வாழ்க்கை நிச்சயமற்றது. திரும்பி வரும்வரை அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் உயிருக்குப் பயப்படுகிற ஊளை நினைவுகளோடு அவர்கள் படகுகளில் பயணிப்பது இல்லை.
அவர்கள் கரையிலிருக்கும் நேரத்தைவிட கடலிலிருக்கும் நேரமே அதிகம். அவர்களை அன்னை தாலாட்டியதைவிட அலை தாலாட்டியதே அதிகம். அவர்களுக்கு வானமே கூரை. சமுத்திரமே சாய்வு நாற்காலி. தூண்டிலே தூரிகை. வலைகளே பின்னலாடை. நிலவே கைக்குழல் விளக்கு.
நாகப்பட்டினத்தில் பணியாற்றுகிற அற்புத வாய்ப்பு அமைந்தது. அப்போது மீனவப் பெருங்குடியினரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர்கள் சொற்களைக் காட்டிலும் இதயம் மென்மையானது. பழகினால் நினைவுகளை மனதில் பச்சைகுத்திக்கொள்பவர்கள். அக் கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், தெற்குப் பொய்கைநல்லூர், வடக்குப் பொய்கை நல்லூர், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு என அத்தனை குடியிருப்புகளும் எனக்கு அத்துபடி.
அன்று அடிக்கடி என்னைச் சந்திக்க வந்த நைனியப்ப நாட்டார், சத்தியமூர்த்தி நாட்டார் ஆகியோர் இன்று இல்லை. ஆனால் அன்போடு பேசும் அவர்களின் சொற்கள் காதுகளில் எதிரொலிக்கும்.
அருகிலிருக்கும் கல்லார் தர்காவில் கந்தூரி விழா நடக்கும்போது அவர்கள் இருவரும்தாம் சிறப்பு விருந்தினர்கள். அங்கிருக்கும் இஸ்லாமியத் தோழர்கள் அவர்களை ‘அப்பா’ என்று அழைப்பதை நேரில் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். எங்கு சென்றது இந்தத் தோழமை உணர்வு! எப்படி மறைந்தது இந்த நல்லிணக்க உணர்வு!
மீனவர்களிடம் அதிகாரம் என்றும் வென்றதில்லை. அன்பே அவர்களைக் கட்டிப்போடும் கயிறு. நாகையைவிட்டு பதவி உயர்வில் கடலூருக்குச் சென்ற பிறகும் திருவிழாக்களுக்கு அவர்கள் அழைப்பது வழக்கம். அன்பு என்கிற கண்ணுக்குத் தெரியாத கயிறால் மனிதர்கள் பிணையுண்டு இருக்கிறார்கள். அது இனவழிச் சரடு அல்ல, மாறாக மனவழிச் சரடு.
ஆழிப்பேரலை கடற்கரை கிராமங்களைத் தாக்கியது என்கிற தகவல் கிடைத்ததும் மொத்த வருத்தம் ஒன்றிருந்தாலும் நாகையில் நான் பழகிய கிராமங்களுக்காக அதிகம் விசனப்பட்டேன். நான் கடற்கரையோரங் களில்தான் களப்பணியாற்றியவன். அக்கரைப்பேட்டை தொடங்கி, கடலூரில் தேவனாம்பட்டணம் வழியாக காஞ்சீபுரத்தின் புதுக்கல்பாக்கம் வரை என் மனம் நிலைகொள்ளாமல் அலைந்து திரிந்தது.
கடலை இவர்கள் எவ்வளவு நேசித்தார்கள்! காலை எழுந்ததும் அதை வழிபட்டுவிட்டுத்தானே காரியங்கள் ஆற்றுவார்கள். ‘கரை, கடல் செய்த சத்தியம்’ என்று எண்ணியல்லவா அதன் மடியிலேயே குடியிருக்கிறார்கள்.
எப்படி அந்த அலைகடலும் செய்த சத்தியத்தை மனிதர்கள்போல மீறத் தொடங்கியது. வீடுகளின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளை அலைக்கைகளால் அள்ளிக்கொண்டு போக எப்படி அந்த கடலுக்கு மனம் வந்தது!
ஆழிப்பேரலை போன்ற சேதம் நிலப்பகுதியில் ஏற்பட்டிருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலைகுலைந்து போயிருப்பார்கள். அன்றாடம் கரை திரும்புவதை பிறவிப் பெருங் கடல் நீந்துவதைப்போல நீந்தி நிம்மதிப் பெருமூச்சு விடுகிற மக்களுக்கு அது நிரந்தரத் தாக்கமாய் நிலைக்கவில்லை.
அவர்கள் ஒட்டிய மண்ணை உதறிக்கொண்டும், ஒழுகிய ரத்தத்தைத் துடைத்துக்கொண்டும் முன்பு இருந்ததைவிட இன்னும் எழுச்சியோடு நிற்க முடியும் என்பதை நிரூபித்தனர்.
அவர்கள் இன்னமும் அதே காதலோடு கடலை நேசிக்கின்றனர். அது ஒருதலைக் காதல் அல்ல, ஒரு அலைக் காதல்.
ஆழிப்பேரலை அடித்துக்கொண்டு போனது உடைமைகளை மட்டுமல்ல, உயிர்களையும்தான். மனிதர்களை மட்டுமல்ல, மகத்தான முயற்சிகளையும்தான். நாகையில் ஆட்சியராக இருந்த ஷிவ்தாஸ் மீனா அரும்பாடுபட்டு அமைத்த கடற்கரைப் பூங்காக் களும் சிதைந்தன. எண்ணற்ற பள்ளிகள் இடிபாடுகளாய் மாறின.
அப்படி சின்னாபின்னமாக சேதப்பட்டவற்றில் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் ஒன்று. அந்த ஊரின் எண்பது குழந்தைகள் பேரலைகளில் பலியானார்கள். பள்ளிக் கட்டிடம் புனரமைக்கப்பட்டது. நம்மால் கோடி கட்டமைப்புகளை உருவாக்க முடியும். ஆனால் ஒரு துளி நம்பிக்கையை உண்டாக்க முடியாது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளியின் வாசல்கள் அகலத் திறக்கப்பட்டபோது அங்கு சேருவதற்கு அணுகுவோர் யாருமில்லை.
மீனவ மக்களிடம் சமூக ஒற்றுமை வலுவாக உண்டு. அங்கு பஞ்சாயத்துத் தலைவர்களை அவர்களே ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களை மீறி யாரும் கை நீட்ட முடியாது. கட்டுக்கோப்புடன் ஊரை வழிநடத்திச் செல்வார்கள்.
பொதுக் காரியம் என்றாலும், புதுக் காரியம் என்றாலும் ஒட்டுமொத்த ஊரே நிதியளித்து அதை செம்மையாக நடத்துவார்கள். ஒன்றை நிகழ்த்துவது என முடிவெடுத்துவிட்டால் பின்வாங்குவதே இல்லை.
கட்டமைப்பு மக்களைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அங்கிருந்த ஆசிரியர்கள் சொந்த நிதியை அளித்ததுடன் உள்ளூர் மக்களிடமும் உதவி கேட்டு கச்சைகட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர். அவர்கள் ஆர்வத்தைக் கண்டு அரசும் ஆதரவுக் கரத்தை அன்புடன் நீட்டியது. முன்கை நீண்டால்தான் முழங்கை நீளும்.
வகுப்பறைகளில் 30 லட்சம் ரூபாய் செலவில் தரை ஓடு பதிக்கப்பட்டது. மடிக்கணினி, இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மிடுக்கு வகுப்பறை முடுக்கிவிடப்பட்டது. ஆங்கிலவழிக் கல்வியும் துளிர்க்கத் தொடங்கியது. முன்னாள் மாணவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் மாடித் தோட்டம் உருவாக்கினர்.
பள்ளி பளபளக்கத் தொடங்கியதும் மக்கள் மனது சலசலக்கத் தொடங்கியது. நல்ல வாய்ப்பைத் தவறவிடுகிறோமோ என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.
2014-ல் மொத்த எண்ணிக்கை 84. அது 2016-ல் 300-ஆக உயர்ந்தது. பிறகு 400-ஐத் தொட்டது. மாணவர் சேர்க்கையில் இப்பள்ளி மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
மக்கள் மன நிறைவோடு அளித்த ஒத்துழைப்பால் அங்கு யோகா வகுப்புகள், கராத்தே பயிற்சி, ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, அழகுக் கையெழுத்துப் பயிற்சி, ஓவியம், உடற்கல்வி வகுப்புகள் என பல்வேறு சிறப்புகள் அரும்புவிட ஆரம்பித்தன.
இந்தப் பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் முகநூல் மூலம் பரவத் தொடங்கியது. சர்வதேச நிறுவன தரப்படுத்துதல் சான்றை அளிப்பவர்கள் செவிகளிலும் இந்தச் சேதி விழுந்தது. அவர்கள் ஆறு மாதங்களாக ஆய்வு செய்து ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர்.
ஏப்ரல் 17-ம் தேதி அதற்காக விழா நடந்தது. மாவட்ட ஆட்சியரிடம் அச்சான்றிதழ் ஒப்படைக்கப்படும்போது அவ்வூர் மக்கள் மேளதாளத்துடன் விழாவிற்கு வந்து சீர்வரிசை தந்து சிறப்பித்தனர். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்புச் சாமான்கள், மேஜை, மின்விசிறி, விளக்குகள் போன்றவற்றை பள்ளிக்கு வழங்கினர். அந்த ஊரைச் சார்ந்த ராஜேந்திரன் என்பவர் இதற்கு அடித்தளம் அமைத்தார்.
இத்தனை முயற்சிகளையும் முன்மொழிந்தது இங்கே தலைமை ஆசிரியராகச் சென்ற பாலு என்கிற நண்பர். நாகையில் பணியாற்றியபோதே பல்வேறு பொது நிகழ்வுகளில் துடிப்புடன் அவர் தொண்டாற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.
‘நம் பள்ளியை நயத்தகு பள்ளியாக மாற்றுவேன்’ என்கிற உறுதியுடன் அவர் ஆற்றிய பணியின் அர்ப்பணிப்பைக் கண்டு அனைவரும் இணைந்துகொண்டனர்.
யார் முதல் அடியை வைப்பது என்பதில்தான் தீர்த்த யாத்திரைகள் தேங்கிக்கொண்டிருக்கின்றன. அவருக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் கிடைத்திருக்கிறது.
நல்ல செயல்கள் என்றேனும் ஒரு நாள் அங்கீ கரிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் சிலரும், நல்ல செயலே நமக்குக் கிடைத்த விருது என்கிற திருப்தியில் பலரும் பணியாற்றுவதால்தான் அங்கங்கே சோலைகள் பூக்களைக் காட்டி புன்முறுவல் செய்கின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவர் இப்படி முன்வந்தால் போதும். ஈரோட்டில் காரப்பாக்கம் என்கிற ஊரில் ஆதிதிராவிடர் பள்ளியில் அகிலா என்கிற ஆசிரியை ஆற்றிய பணி அதை மாதிரிப் பள்ளியாய் மாற்றிக் காட்டியது. இன்னும் பல முயற்சிகள் முன்னெடுப்பவர்களுக்காக காத்திருக்கிறது என்பதே இச்செய்தி தரும் சேதி.
(செய்தி தொடரும்)

Related Tags :
Next Story