ஈரோட்டில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2017 4:00 AM IST (Updated: 9 July 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் அணி மாவட்ட செயலாளர் க.அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வம், கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், மாநகர செயலாளர் ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில செய்தி தொடர்பாளர் மா.முத்துக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் மற்றும் அண்ணா சிலை அருகில் அம்பேத்கரின் சிலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட துணைச்செயலாளர் செம்பன், துணைச்செயலாளர்கள் தேசிங்கு, சபி உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Next Story