திருச்சுழி தாலுகா அலுவலகம் முற்றுகை


திருச்சுழி தாலுகா அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 July 2017 3:15 AM IST (Updated: 10 July 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

சாமி கும்பிட வந்தவர்களை தகாத வார்த்தைகளில் பேசியதால் திருச்சுழி தாலுகா அலுவலகம் முற்றுகை

திருச்சுழி,

நரிக்குடி அருகே உள்ள பனைக்குடியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. அதையொட்டி நடைபெற்ற நாடக நிகழ்ச்சியில் இருதரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினரை தவிர, மற்ற அனைத்து தரப்பினரும் திருவிழா நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வருடம் கடந்த 30–ந்தேதி திருவிழா நடத்துவது என்று அனைத்து சமுதாயத்தினரும் முடிவு செய்தனர். அதில் ஒரு தரப்பினர், புரவி எடுப்பு விழா தேதி தங்கள் தரப்பை கேட்காமல் குறிக்கப்பட்டதாக, அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.விடம் புகார் செய்தனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு சமாதான கூட்டம் நடத்தி, திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு தரப்பினரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், அதை சமாதானம் செய்தவர் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும் கூறி பெண்கள் உள்பட ஏராளமானோர் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த ஆர்.டி.ஓ. சமரச பேச்சு நடத்தினார். அதில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story