திருவல்லிக்கேணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு பொதுமக்கள் படையெடுப்பு
திருவல்லிக்கேணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு பொதுமக்கள் படையெடுப்பு, வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய கோரிக்கை
சென்னை
சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலி குடங்களுடன் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு பொதுமக்கள் படையெடுக்கின்றனர். வீடுகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் தட்டுப்பாடு காரணமாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுவாமி சிவானந்தா சாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருக்கும் ‘பம்பிங் ஸ்டேஷனில்’ இருந்து லாரிகளில் பிடிக்கப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் அதுவும் தற்போது முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் திருவல்லிக்கேணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் நேரடியாக எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கே படையெடுத்து வருகின்றனர்.
சிறுவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் காலி குடங்களை தூக்கிக்கொண்டும், 3 சக்கர சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களில் மொத்தமாக காலி குடங்களை ஏற்றிக்கொண்டும் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு வந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.
இது குறித்து திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த நாராயணன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் கூறியதாவது:-
வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு வந்து தண்ணீர் பிடித்து செல்கிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தால் ஏரிகளில் தண்ணீர் இல்லை என்று கூறுகின்றனர்.
அரபு நாடுகளில் இருப்பது போன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் அமைத்து தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வீடுகளுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story