1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது


1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2017 4:30 AM IST (Updated: 10 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுகள் முத்துசாமி, சீனிவாசன், மாதேஸ்வரன் ஆகியோர் கிருஷ்ணகிரி அடுத்த ஒப்பதவாடி பஸ் நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.

போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த அரிசி வேலூரில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22), கிருஷ்ணகிரி அருகே உள்ள சென்னசந்திரத்தைச் சேர்ந்த அசோக் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரையும், 1,500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story