நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 July 2017 4:15 AM IST (Updated: 10 July 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

நவீன வசதிகளுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தி.மு.க. இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, இளையபெருமாள், மணல்மேடு பேரூர் செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவதாஸ் வரவேற்றார். இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி, மரக்கன்றுகளை அதிக அளவில் நடுவது. ‘நீட்‘ தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கும், அதற்கு துணைபோகும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பது. நாகை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முகாம் அமைத்து கட்சியில் அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது. 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது. போலி வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை அந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது. போதிய அளவில் டாக்டர்களை நியமித்து நவீன வசதிகளுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து தி.மு.க. இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், அருள்செல்வன், நகர துணை செயலாளர்கள் ஆர்.கே.சங்கர், தெய்வநாயகம் மற்றும் வக்கீல் தணிகை பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story