மருதையாற்றின் குறுக்கே அணை கட்ட வலியுறுத்தி மக்கள் சேவை இயக்கத்தினர் பிரசாரம்

திருமானூர்,
அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி அருகே ஓடும் மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி உபரி நீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு திருப்பி விட மக்கள் சேவை இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, உபரிநீரை சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பி விடுவதற்கான திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்படும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமை செயலகத்தை 100 நாட்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்த மக்கள் சேவை இயக்கத்தினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நேற்று முதல் பொதுமக்களை ஒன்று திரட்டும் வகையில் பாதி மொட்டை அடித்து ஒவ்வொரு கிராமமாக சென்று மக்கள் சேவை இயக்கத்தினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முக சுந்தரம் பாதி மொட்டை அடித்துக்கொண்டு, நிர்வாகிகளுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட பிரசாரம் செய்து வருகிறார். அப்போது ராமச்சந்திரன், தங்கமலை, நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story