கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 10 July 2017 4:15 AM IST (Updated: 10 July 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே பூசனூரில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் 2 நாட்கள் நடத்தப்பட்டது. கடந்த 8–ந்தேதி நடு மாட்டு வண்டி பந்தயமும், அதனை தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயமும் நடந்தது. நடு மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 16 வண்டிகள் கலந்து கொண்டன.

இந்த பந்தயம் பூசனூரில் இருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.10 ஆயிரமும், 2–வது இடத்திற்கு ரூ.8 ஆயிரமும், 3–வது இடத்திற்கு ரூ.6 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 23 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த வண்டிக்கு ரூ. 5 ஆயிரமும், 2–வது இடத்திற்கு ரூ.4 ஆயிரமும், 3–வது இடத்திற்கு ரூ.3 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.


நேற்று காலையில் நடந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் இடம் பிடித்த வண்டிக்கு ரூ.12 ஆயிரமும், 2–வது இடத்திற்கு ரூ.10 ஆயிரமும், 3–வது இடத்திற்கு ரூ.8 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக ரூ.8 ஆயிரமும், 2–வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3–வது பரிசாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட்டன. சுற்றுவட்டார மக்கள் திரளாக இந்த போட்டிகளை கண்டு ரசித்தனர்.


Related Tags :
Next Story