நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கிடைக்காததால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் குத்தாலம் விளாவடிகாலனியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது38). இவருடைய மனைவி ஜானகி (32). கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு பவஸ்ரீ(14), ஜெயஸ்ரீ(13), ஹிட்லர் (11), வேலன் (9) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு அங்கன்வாடி பணியாளராக வேலைக்கு சேர்ந்த ஜானகி, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கேட்டு ஜானகி விண்ணப்பித்திருந்தார்.
அந்த நிதி உதவி அவருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஜானகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து, கலெக்டர் சுரேஷ்குமாரிடம், ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறி யிருப்பதாவது:-
கடந்த 2002-ம் ஆண்டு புகழேந்தி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டேன். பின்னர் குத்தாலம் பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அந்த அங்கன்வாடி மையம் காலி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகளின் அனுமதியுடன் எனது வீட்டில் அங்கன்வாடி மையத்தை நடத்தி வந்தேன். இந்த நிலையில் எனது வேலையை பறித்து விட்டனர். முன்னதாக கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தேன். இந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. வேலையை இழந்த நிலையில், நிதி உதவியும் கிடைக்காததால் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறேன். எனவே எனது அடையாள அட்டைகளை ஒப்படைக்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கோரிக்கை மனு அளிக்க வந்த ஜானகி தனது ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் கலெக்டரிடம் ஒப்படைக்க முயன்றார். ஆனால் கலெக்டர், கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக் கொண்டார். ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை வாங்க மறுத்து விட்டார்.
இதையடுத்து கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த ஜானகி, தன்னிடம் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து, அவரை மீட்டனர். பின்னர் ஜானகி மற்றும் அவருடைய கணவர், குழந்தைகளை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதனிடையே ஜானகி அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story