பெரம்பலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பானுமதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அழகர்சாமி வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். சனிக்கிழமை விடுமுறையை மீண்டும் வழங்க வேண்டும். 5 வருடம் பணிமுடித்த தகுதி உள்ள உதவியாளர்களுக்கு பணியாளர் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுமதி, சக்தி, தமிழரசி உள்பட நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story