நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில வாலிபர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு
அரியலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர்களிடமிருந்து 60 கிலோ வெள்ளி மற்றும் 8 பவுன் தங்க நகையை போலீசார் கைப்பற்றினர்.
அரியலூர்,
அரியலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 45). இவர், அரியலூர் பெரியகடை தெருவில் சுந்தரா ஜூவல்லர்ஸ் என்கிற நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 26-ந்தேதி இரவு இவர், வழக்கம் போல் தனது நகைக்கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை நகைக்கடையை திறக்க வந்த போது கடப்பாரையால் ஷட்டர் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு சுந்தரராமன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் நகைக்கடையின் உள்ளே சென்று பார்த்த போது தங்க சங்கிலிகள், வளையல்கள் உள்பட 25 பவுன் நகைகள் மற்றும் 80 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுந்தரராமன் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், பெரியகடை தெருவில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் கருதினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த அன்று பெரியகடை தெருவில் செல்போன் அழைப்பு விவரங்களை எடுத்தும் விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் கொள்ளையர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்டமாக தெரிய வந்தது. பின்னர் தனிப்படை போலீசார் மத்திய பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர். பின்னர் மத்தியபிரதேச மாநில குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடினர். அப்போது அரியலூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சிவ் பன்வர் (32) மற்றும் அன்கூர்சிங் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் அரியலூர் தனிப்படை போலீசார் கைது செய்து அரியலூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அந்த 2 பேரையும் அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சஞ்சிவ் பன்வர், அன்கூர்சிங் ஆகியோரிடமிருந்து 60 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 8 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

Related Tags :
Next Story