புதிதாக கட்டப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


புதிதாக கட்டப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகில் உள்ள ராமாபுரம் இருளர் காலனியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தில் புதிதாக ரே‌ஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

திருத்தணி,

ஆனால் இந்த கடை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி பொது மக்கள் நீண்ட தூரம் சென்று ரே‌ஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள ரே‌ஷன் கடையை உடனடியாக திறந்து, முறையாக தங்களுக்கு ரே‌ஷன் பொருட்களை வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை ராமாபுரம் இருளர் காலனியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் ரே‌ஷன் கார்டுகளை கீழே வீசி எறிந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரே‌ஷன் கடையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story