ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று கவர்னர் கிரண்பெடி டெல்லி சென்றார்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 17–ந்தேதி நடக்கிறது. இந்தநிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாநில கவர்னர்களுக்கு விருந்தளிக்கிறார்.
புதுச்சேரி,
இதற்காக அனைத்து மாநில, யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்.
டெல்லி சென்று இருக்கும் கவர்னர் கிரண்பெடி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் சிலரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அப்போது புதுவையில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து அவர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
அந்தநேரத்தில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 13–ந்தேதி புதுச்சேரி திரும்ப கவர்னர் கிரண்பெடி திட்டமிட்டுள்ளார்.