சேலம் கலெக்டர் அலுவலக 4–வது மாடியில் இருந்து தொழிலாளி தற்கொலை செய்யபோவதாக வெளியான தகவலால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலக 4–வது மாடியில் இருந்து தொழிலாளி தற்கொலை செய்யபோவதாக வெளியான தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 July 2017 5:02 AM IST (Updated: 11 July 2017 5:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலக 4–வது மாடியில் இருந்து தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்யபோவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி பகுதியில் கடந்த 1997–ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், நூலகம், பெண்களுக்கான சுகாதார வளாகம் ஆகியவை கட்டிக்கொள்ளும் வகையில் பொது இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வருவதாகவும், எனவே, அந்த பொது இடத்தை மீட்க வேண்டும் என்றுக்கூறி ஆணையம்பட்டியை சேர்ந்த தொழிலாளி இளங்கோ என்பவர் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொது நிலமாக தொடர உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் அதை செயல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்தநிலையில், சேலம் மாவட்ட கலெக்டரிடம் 5 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த இளங்கோ நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது நண்பர்களுடன் மீண்டும் வந்தார். பின்னர், அவர் கலெக்டர் அலுவலக 4–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யபோவதாக தகவல் பரவியது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு இளங்கோவை தேட ஆரம்பித்தனர். 4–வது மாடிக்கு சென்று அவர் எங்கு இருக்கிறார்? என போலீசார் தீவிரமாக வலைவீசி தேடினர். இதனிடையே 4–வது மாடிக்கு சென்ற இளங்கோ, போலீசார் வருவதை அறிந்து வேகமாக கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story