கப்பல்தளத்தில் 279 பயிற்சிப்பணி


கப்பல்தளத்தில் 279 பயிற்சிப்பணி
x

கப்பல்தளத்தில் 279 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல் நிறுவனம் மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். கப்பல்கட்டும் நிறுவனமான இதில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 279 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரீசியன், பிட்டர், டிராப்ட்ஸ்மேன், பைப் பிட்டர், ஸ்ட்ரக்சரல் பிட்டர், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பென்டர், ரிகர், வெல்டர் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. பணி வாரியான காலியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

‘குரூப்-ஏ’ பிரிவு பணிகளுக்கு 19 வயதுக்கு உட்பட்டவர்களும், ‘குரூப்-பி’ பிரிவு பணிகளுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்களும், ‘குரூப்-சி’ பணிகளுக்கு 18 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப் படும்.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், 8-ம் வகுப்பு படித்தவர்கள் ஆகியோருக்கு பணிகள் உள்ளன.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-7-2017-ந் தேதியாகும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

Next Story