நெல்லையில் அழகுமுத்துகோன் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


நெல்லையில் அழகுமுத்துகோன் உருவசிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்துகோன் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை,

அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விஜிலா சத்யானந்த் எம்.பி., அவை தலைவர் பரணிசங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் மண்டல தலைவர் எம்.சி.ராஜன், பால்கண்ணன், விவேகானந்த பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா அணி) சார்பில் முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் வக்கீல் ஜெனி, வேலுதாஸ், முன்னாள் கவுன்சிலர்கள் ஆறுமுகம், பரமசிவன், குறிச்சி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அவைதலைவர் சுப.சீதாராமன், முன்னாள் மேயர் உமாமகேசுவரி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், வட்ட செயலாளர் கோ.நாராயணன், பேபி சுந்தர், சுரே‌ஷ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்– த.மா.கா.

காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் எம்.பி.ராமசுப்பு, துணை தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உமாபதி சிவன், சுந்தரராஜபெருமாள், மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, முன்னாள் கவுன்சிலர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, நல்லாசிரியர் செல்லப்பா, வட்டார தலைவர் டியூக்துரைராஜ், தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணி நிர்வாகி குயிலிநாச்சியார் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் தொகுதி செயலாளர் அன்பரசு, ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ம.தி.மு.க.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் முகமதுஅலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் சியோன்தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அகில இந்திய யாதவ மகாசபை சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் பொட்டல் துரை யாதவ் தலைமையில் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.


Next Story