சூட்கேஸ் கலாசாரம் பற்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றாக தெரியும் குமாரசாமி பேட்டி
சூட்கேஸ் கலாசாரம் பற்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றாக தெரியும் என்று குமாரசாமி கூறினார். ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
பெங்களூரு,
பிரஜ்வல் மீது அவர்களுக்கு திடீரென பாசம் பொங்குவது ஏன்?. சூட்கேஸ் கலாசாரம் பற்றி என்னைவிட இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கள் கட்சி சார்பில் டெல்லி மேல்–சபை தேர்தலில் வேட்பாளராக நின்ற பாரூக்கிடம் இருந்து நான் சூட்கேஸ் பெற்றதாக அவர்கள் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. விசாரணைக்கு...பாருக்கிடமே இதுபற்றி கேளுங்கள், உண்மை என்ன என்பது தெரியவரும். பாரூக் ஒன்றும் திருட்டுத்தனமாக தொழில் செய்யவில்லை. தேர்தலில் போட்டியிட ரூ.10 கோடி கேட்டால் நாங்கள் எங்கிருந்து கொடுப்பது?, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியுமா?. என்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். எனக்கு எதிராக அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.
அவர்கள் முதல்–மந்திரிக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். சித்தராமையாவிடம் எடுத்துக் கூறி என் மீது கூறும் புகார்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதுதானே. இதுபோதாது என்றால் அமெரிக்க அதிபரிடம் சொல்லி விசாரணை நடத்தட்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.