எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
திருச்சி,
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளன் உள்பட 7 பேர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என கூறி இருக்கிறார். இதனை மனித நேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கதிராமங்கலம் பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது. காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் தலைமையில் தமிழகம் முழுவதும் ஜூலை 12-ந்தேதி(இன்று) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள சட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து அதனை திரும்ப பெற வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். தமிழக மீனவர்களுக்கு 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை மோடி மீறி விட்டார். தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை அரசு பறிமுதல் செய்த 149 படகுகளில் ஒன்றை கூட மோடியால் இதுவரை மீட்க முடியவில்லை. அவர் பலவீனமான பிரதமராக இருக்கிறார்.
இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என கூறிய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த அ.தி.மு.க. அரசை கலைக்க மாட்டோம் என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறி இருக்கிறார். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே உள்ள ரகசிய உடன்பாடு பகிரங்கமாக்கப்பட்டு இருப்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story