பாடப்புத்தகம் வாங்க பணம் இல்லாததால் 7–ம் வகுப்பு மாணவன் தற்கொலை


பாடப்புத்தகம் வாங்க பணம் இல்லாததால் 7–ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூர் அருகே பாடப்புத்தகம் வாங்க பணம் இல்லாததால், 7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

நாக்பூர்,

நாக்பூர் மாவட்டம் மாலேகாவ் தக்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சிவம் ராஜேஷ் (வயது 12) என்ற மகனும், 3 மகளும் இருக்கின்றனர். இதில், சிவம் ராஜேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை முடிந்து கடந்த மாதம் பள்ளிக்கூடம் திறந்தது. பாடப்புத்தகமும், பையும் வாங்கி தருமாறு தந்தையிடம் சிவம் ராஜேஷ் தொடர்ந்து கேட்டு வந்தான். ஆனால், பணம் இல்லாததால் அவரால் பாடப்புத்தகம் வாங்கி தர இயலவில்லை.

தற்கொலை

மேலும், ‘2 நாட்கள் பொறுத்திரு, கடன் வாங்கியாவது வாங்கி தருகிறேன்’ என்று மகனை சமாதானப்படுத்தினார். இதனால், விரக்தி அடைந்த சிவம் ராஜேஷ், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. போலீசார் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story