திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி


திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 12 July 2017 3:52 AM IST (Updated: 12 July 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதால், அந்த மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மாட்டுமந்தையில் உள்ள ரெயில்வே கேட் வழியாக மணலி, மாதவரம், அம்பத்தூர் உள்பட பல பகுதிக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.

அடிக்கடி அந்த ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் கடந்த 2014–ம் ஆண்டு ரூ.47 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமானப்பணி தொடங்கியது.

ஆனால் மேம்பாலம் கட்டுமானப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது. இதனால் மணலி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்தனர்.

இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி

மேலும், பொதுமக்கள் குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதியடைந்து வந்தனர்.

மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தனர். தற்போது மாட்டுமந்தை மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து சர்வீஸ் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

மேம்பால திறப்புக்காக காத்திருக்காமல் அதன் மீது இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் மேம்பாலத்தை திறந்து, முழுமையான பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story