நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 4:00 AM IST (Updated: 13 July 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் அருகே குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் குமாரராசா தொடங்கிவைத்து பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மா.க., திராவிட இயக்க தமிழ் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story