எண்ணூரில் தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் பேத்தி தற்கொலை


எண்ணூரில் தாத்தா இறந்த துக்கம் தாங்காமல் பேத்தி தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2017 4:30 AM IST (Updated: 13 July 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் வடக்கு பாரதியார் நகரில் வசித்து வந்தவர் மீனா (வயது 18). இவருடைய தாய்–தந்தை இறந்து விட்டனர். இதனால் மீனா, அதே பகுதியில் வசிக்கும் தனது தாத்தா சேதுராமன், பாட்டி பாக்கியலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தார்.

திருவொற்றியூர்,

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேதுராமன் இறந்து விட்டார். தனது தாத்தா இறந்த துக்கம் தாங்க முடியாமல் மீனா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சேதுராமன், மீனா பெயரில் வங்கியில் பணம் போட்டு வைத்து உள்ளார். இதுபற்றி மீனாவிடம் அவருடைய பாட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் மனம் உடைந்த மீனா, தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்த எல்லா மாத்திரைகளையும் எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கிய அவரை மீட்டு திருவொற்றியூர் சுனாமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story