காஞ்சீபுரம் நகராட்சியில் வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பு அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொழிற்சாலைகள், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நேரடியாக நகராட்சி பணியாளர்கள் உங்களின் இருப்பிடத்திற்கே வந்து பிளாஸ்டிக் மற்றும் மட்காத குப்பைகளை பெற்று செல்வார்கள்.
காஞ்சீபுரம்,
எனவே பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் மற்றும் மட்காத குப்பைகளை புதன்கிழமை மட்டும் நகராட்சி பணியாளர்களிடம் நேரடியாக கொடுக்க வேண்டும். மேலும் வாரத்தில் மற்ற நாட்களின் பிளாஸ்டிக் மற்றும் மட்காத குப்பைகளை தெருக்களிலோ அல்லது பொது இடங்களிலோ கொட்ட வேண்டாம். நகராட்சி பணியாளர்கள் பெற்றுக்கொள்ளும் வரை தங்களின் இருப்பிடத்திலேயே சேகரித்து வைத்து கொள்ளவேண்டும்.
மட்கும் குப்பைகளை நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்டவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story