ரூ.1¼ லட்சத்தை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


ரூ.1¼ லட்சத்தை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 13 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் லத்துவாடி கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் கோபிநாத்(வயது 42). இவருடைய நண்பர் பழனிசாமி.

ஆத்தூர்,

 இவர்கள் இருவரும் ஆத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி ஒன்றுக்கு நேற்று மதியம் வந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் எடுத்தனர். பணத்தை தங்களது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்தனர்.

 பின்னர் கேசவலு ரோட்டில் உள்ள ஒரு கெடிகார கடையில் கெடிகாரம் வாங்க சென்றனர். அப்போது 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அந்த பணத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தார்.

உடனே கோபிநாத் அந்த வாலிபரை பிடிக்க ஓடினார். இதையடுத்து அந்த வாலிபர் பணப்பையை போட்டு விட்டு தப்பிஓடினார். அப்போது பஸ்நிலைய பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், பெயரை முன்னுக்கு பின் முரணாக கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story