கதிராமங்கலத்தில் கிராம மக்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கதிராமங்கலத்தில் 12 நாட்களுக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டன. மேலும் கிராம மக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டதால் நடந்த போராட்டத்தில் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அப்பகுதி வணிகர்கள் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்வர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு மதுரை ஐகோர்ட்டு ஒத்தி வைத்ததால் மக்களின் கோரிக்கை ஏற்று வணிகர்கள் நேற்று கடைகளை திறந்தனர். கதிராமங்கலத்தில் 12 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது.
மேலும் கதிராமங்கலத்தை சேர்ந்த பெண்கள் நேற்று 2-வது நாளாக அய்யனார் கோவில் தோப்பில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் கதிராமங்கலத்துக்கு வந்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் கடந்த 30-ந் தேதி கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்தில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், கல்லூரி மாணவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே கதிராமங்கலம் தர்மராஜன் சாலை பகுதியில் உள்ள 70 குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் தனியாக குடிநீர் வசதிக்காக பைப்லைன் அமைத்து தர வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் கோஷம் எழுப்பினர். இதனால் நேற்று காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story