ஹெல்மெட் அணிந்து கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து உடைத்த வாலிபரால் பரபரப்பு
நாகையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை நீலா தெற்கு வீதியில் பல வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளுக்கான ஏ.டி.எம். மையங்களும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அந்த பகுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டும், கண்காணிப்பு கேமரா திருடப்பட்டும், ஏ.டி.எம். மையம் முழுவதும் குப்பையாகவும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் இதுகுறித்து நாகை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஏ.டி.எம். மையம் அருகே கண்காணிப்பு கேமரா கிடந்தது. இதை கைபற்றிய போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து கொண்டு மர கம்பு, குப்பைப்பையுடன் உள்ளே நுழைந்த நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தை முதலில் சுத்தம் செய்கிறார். பின்னர் எந்திரத்தை மர கம்பால் அடித்தும், கண்காணிப்பு கேமராவை பிடித்து தொங்குவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் அந்த பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் என்பதும், அந்த நபர் ஏ.டி.எம். மையத்தின் வெளியே நிறுத்தியிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் உள்ளே புகுந்து எந்திரத்தை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story