தலைமை செயலகம் முன்பு புத்தர் சிலை மனோஜ் பரிதா திறந்து வைத்தார்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் முன்பு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
புதுச்சேரி,
விழாவில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா கலந்து கொண்டு புத்தர் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மற்றும் அரசுத்துறை செயலாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எம்.எல்.ஏ.க்கள் வாரியத்தலைவராகவோ அல்லது கார்ப்பரேஷனில் தலைவராகவோ பதவி வகித்தால் அவருக்கு பதவி இழப்பு வராதென்று ஜனாதிபதி ஒப்புதலோடு சட்டம் ஏற்றப்பட்டுள்ளது. ஒரு சட்டம் நிறைவேற்றிய பின்னர் எப்படி அதற்கு தடை விதிக்க முடியும். படிக்க தெரியாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள். கவர்னர் கிரண்பெடி சட்டம் தெரியாதது போல் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story