செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையாவிடம் அறிக்கை தாக்கல்


செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையாவிடம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 13 July 2017 5:18 AM IST (Updated: 13 July 2017 5:18 AM IST)
t-max-icont-min-icon

மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீர்திருத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஆர்.சீனிவாஸ் தலைமையில் ஒரு குழு கடந்த ஜனவரி மாதம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டது.

பெங்களூரு,

மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீர்திருத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஆர்.சீனிவாஸ் தலைமையில் ஒரு குழு கடந்த ஜனவரி மாதம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நேற்று பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், “அரசின் திட்டங்களை அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இதை செய்ய வேண்டும். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு துறைகளில் குறைகள் குறித்த செய்திகளை கவனித்து அதை தீர்க்க ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு சிபாரிசுகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அறிக்கையை பெற்றுக்கொண்ட பிறகு நிருபர்களிடம் கூறிய சித்தராமையா, இந்த அறிக்கை குறித்து மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story