நெல்லை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
இளைஞர்களுக்கு உதவி தொகைதமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்து இருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
9–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10–ம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200–ம், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300–ம் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400–ம் வழங்கப்படுகிறது. பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்த உதவி தொகை இளைஞர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிப்பினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற இனத்தவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சுய உறுதிமொழி ஆவணங்கள்தொலை தூரக்கல்வி படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்து மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே உதவி தொகை பெற்று வருபவர்கள் தங்களின் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து அத்த மாதம் (ஆகஸ்டு) 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவி தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இலவசமாக விண்ணப்பங்கள்உதவி தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து அனைத்து கல்வி சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். மேலும் உதவி தொகை பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.