திருச்செந்தூர் அருகே 2 தோட்டங்களில் தீ விபத்து: 300 வாழைகள், தென்னை, பனை மரங்கள் கருகின
திருச்செந்தூர் அருகே 2 தோட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் வாழைகள், தென்னை, பனை மரங்கள் கருகின.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே 2 தோட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் வாழைகள், தென்னை, பனை மரங்கள் கருகின.
தோட்டங்களில் தீ விபத்து
திருச்செந்தூர் ஆவுடையார்குளம் அருகில் உடன்குடி சிவலூரைச் சேர்ந்த பாக்கியசெல்வன், சுயம்புராஜ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. இங்கு தென்னை, வாழை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. நேற்று மதியம் இந்த தோட்டங்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தோட்டங்களில் நாலாபுறமும் தீ வேகமாக பரவியது.
3 மணி நேரம்...
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர், சாத்தான்குளம், சாகுபுரம் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மரங்கள் கருகின
தீ விபத்தில் சுமார் 300 தென்னை மரங்கள், பனை மரங்கள், வாழை மரங்கள் கருகி சேதம் அடைந்தன. மின் ஒயர்கள் உரசியதால் ஏற்பட்ட தீப்பொறியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதவி கலெக்டர் கணேஷ்குமார், தாசில்தார் அழகர், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Related Tags :
Next Story