மும்ரா அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி


மும்ரா அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 14 July 2017 3:39 AM IST (Updated: 14 July 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம், மும்ரா அருகே உள்ள டைகர் பகுதியை சேர்ந்த சிறுவன் சர்வார் அஷ்ரப்(வயது 12). அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.

தானே,

தானே மாவட்டம், மும்ரா அருகே உள்ள டைகர் பகுதியை சேர்ந்த சிறுவன் சர்வார் அஷ்ரப்(வயது 12). அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் தனது அண்ணன்கள் முன்ஷாத்(25), வாஷிம்(19) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மும்ரா நோக்கி சென்று கொண்டு இருந்தான். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் டைகர் பகுதியில் சென்றபோது, முன்ஷாத் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் சறுக்கி 3 பேரும் கீழே விழுந்தனர்.

இதில், சிறுவன் சர்வார் அஷ்ரப் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்கள்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் பிரிஜேஸ்(37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story