உலக இளைஞர் திறன் வார விழாவையொட்டி கருத்தரங்கம்-அறிவியல் கண்காட்சி
அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக இளைஞர் திறன் வார விழாவையொட்டி கருத்தரங்கம்-அறிவியல் கண்காட்சியை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக இளைஞர் திறன் வார விழாவினை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி முதல் நாளை (சனிக்கிழமை) வரை உலக இளைஞர் திறன் வாரமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் திறன் எய்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிகள் ஆட்டோமொபைல், கட்டுமானம், இலகு பொறியியல் தொலைதொடர்பு, ஊடகம், விருந்தோம்பல், அழகுக்கலை, தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், கால்நடைத்துறை, கனரக, இலகுரக வாகன ஓட்டுனர், ஜவுளி, வங்கி நிதி சேவை, சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், சில்லரை வர்த்தகம், மென்திறன் பயிற்சி, பட்டுபுழு வளர்த்தல், பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத்துறை, மீன் வளத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய துறைகள் மூலம் இலவச திறன் எய்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் நாளொன்றுக்கு போக்கு வரத்து செலவாக ரூ.100 வழங்கப்படுகிறது.
சிறந்த முறையில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு தனியார் வேலைவாய்ப்பு துறையில் முன்னுரிமை வழங்கப்படுகின்றன. எனவே தன்னம்பிக்கையுடன் சிறப்பாக பயிற்சியினை முடித்து எதிர்காலத்தில் நல்ல தொழில் முனைவோர்களாக வளரவேண்டும்.
முன்னதாக தொழிற்பயிற்சி மாணவ- மாணவிகளின் சிறந்த படைப்புகள் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. அதனை கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டார். கருத்தரங்கத்தில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மாரீஸ்வரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆறுமுகம், தொழிலாளர் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளர் சேகர், முன்னோடி வங்கி நல அலுவலர் ராஜேஷ், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story