வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற் றோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எழுத, படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.6.2012-ந் தேதிக்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 30.6.2017 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப் பினர்கள் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. அரசால் வழங்கப் படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ-மாணவியாக இருத்தல் கூடாது. எனினும் தொலை தூரக்கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.9.2017-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெற தேவையில்லை.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story