கும்பகோணத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

கும்பகோணம்,
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் குருசாமி, சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஓய்வூதிய பங்கீட்டை அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Tags :
Next Story