ஜாதி பஞ்சாயத்து மூலம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் ஜெயில்


ஜாதி பஞ்சாயத்து மூலம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் ஜெயில்
x
தினத்தந்தி 14 July 2017 4:21 AM IST (Updated: 14 July 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பல கிராமங்களில், தவறு இழைத்தவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் பல கிராமங்களில், தவறு இழைத்தவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இப்படி ஊர் கூடி ஒருவரை ஒதுக்கிவைத்து தண்டனை வழங்குவது தவறு என்பதால் அதற்கு எதிராக “சமூக புறக்கணிப்பு சட்டம் 2015” இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்மூலம் சாதி பஞ்சாயத்து நடத்தி ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கிவைப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

Next Story