ஊரகவளர்ச்சித்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்


ஊரகவளர்ச்சித்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 5:50 AM IST (Updated: 14 July 2017 5:50 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வரும் சீரான குடிநீர் வினியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனி நபர் கழிவறைகள் அமைக்கும் திட்டம், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தாய் திட்டம் மற்றும் வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசு திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள், உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story